search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் கமிஷனர்"

    • கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
    • கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி - பஞ்செட்டி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மீஞ்சூரை அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

    இதனையடுத்து வல்லூர் சந்திப்பில் இருந்து மணலி, எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சரக்கு பெட்டக வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி வழித்தடத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொது மக்களின் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் துறைமுகம் நோக்கி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்கு வரத்து நெரிசல் குறையும். சாலை யோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அதிவேகமாகவும், சாகசங்கள் செய்தபடியும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் சாலை தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளை ஓட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரடியாக சென்று சோதனை நடத்தி அவர்களது நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் ஆவடி பகுதியில் 1100 ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை சுமார் 1,100 ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப்பட்டு 980 வீடுகள் மற்றும் தங்குமிடங்கள் சோதனையிடப்பட்டது. இதில் கத்தி, கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    சுமார் 287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 107 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் 479 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. 141 ரவுடிகள், 46 திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளிகள், 40 போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் 13 இதர முக்கிய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என சுமார் 240 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரவுடிகள் மீதான வழக்குகளை கண்காணித்து, தலைமறைவான எதிரிகளை பிடிக்கவும் அவர்களை நீதிமன்ற விசாரணையின்போது தொடர்ந்து ஆஜர்படுத்தி வழக்கை விரைந்து முடிக்கவும், தண்டனை பெற்று தரவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் பிணையில் உள்ள ரவுடிகளின் பிணைகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி மாமுல் வசூலிக்கும் ரவுடிகளின் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு அவர்கள் பெற்ற பணத்தில் அவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்களில் வாங்கப்பட்ட அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையின் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் இன்று நெல்லை மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வரு கின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையின் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் அங்கு வரவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த உறுதிமொழிக் குழுவினர், இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தின் போது, போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அவ்வாறு விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு பரிந்துரைக்கப்படும் என சட்டமன்ற உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை சாவடிகளை பார்வையிட்டார்.
    • முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உபயோகத்தில் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.

    திருநின்றவூர்:

    ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர். இவர் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அம்பத்தூர் பஸ் நிலையத்தில் தொடங்கி அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை சாவடிகளை பார்வையிட்டார்.

    ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, செங்குன்றம், பூந்தமல்லி, நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கமிஷனர் சங்கர் ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசாரின் இரவுநேரக காவல் பணியை பார்வையிட்டார்.

    அப்போது பணியில் இருந்த போலீசாரிடம் பாதுகாப்பு மற்றும் குறைகள் குறித்து கமிஷனர் கேட்டறிந்தார். மேலும் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உபயோகத்தில் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.

    சமீபத்தில் செங்குன்றம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட போலீஸ் பூத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். கமிஷனர் சங்கரின் இரவு நேர ஆய்வு காரணமாக போலீசார் விடிய, விடிய பரபரப்பாக காணப்பட்டனர்.

    • மாநகர போலீஸ் கமிஷனர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை கோவை சிறையில் உள்ள சரவணனிடம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.
    • சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

    திருநின்றவூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 45 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு செல்வதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை வழக்கமான உற்சாகத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர் களை பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் வரவேற்றனர்.

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகள் திறப்பையொட்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:-

    ஆவடி பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட முக்கிய பிரதான சாலைகள் மற்றும் இதர உட்புற சாலைகளில் 478 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

    பள்ளிகளில் இயங்கி வரும் வாகனங்களின் தற்போதைய இயக்கநிலை குறித்தும் வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் செயல்பாடுகள், வேகக்கட்டுபாடு, அவசர வழி கதவுகள் ஆகியவைகள் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி நிறுவனங்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.

    இதர உள் சாலைகளில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு அப்பள்ளிகளில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.பி. மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் மூலம் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர போக்குவரத்தினை சீர்செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் ஆட்டோக்கள், வேன்களின் ஓட்டுநர்களுக்கு பள்ளி மாணவ-மாணவி களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்று வரவேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்தும், சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டும் சாலையை கடந்தும் பாதுகாப்பாக பள்ளி சென்று வர வேண்டும். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • தலைமை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் புலனாய்வு உதவி கமிஷனராக பணிபுரியும் கண்ணன் வேப்பேரி போலீஸ் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளார்.

    சென்னை:

    சென்னை போலீஸ் காவல் ஆணையரகம் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட தரமணி உதவி கமிஷனராக பணியாற்றும் ஜீவானந்தம் தெற்கு பகுதி தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு உதவி கமிஷனராகவும், தாமஸ் மவுண்ட் உதவி கமிஷனர் அமீர் அகமது தரமணிக்கும், சிலை கடத்தல் பிரிவு உதவி போலீஸ் கமிஷராக (சி.ஐ.டி.) இருக்கும் மோகன் ராயப்பேட்டை உதவி கமிஷனராகவும் தலைமை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் புலனாய்வு உதவி கமிஷனராக பணிபுரியும் கண்ணன் வேப்பேரி போலீஸ் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னை காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து,சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

    சென்னையில் ரிமோட் மூலம் செயல்படும் நவீன சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பில் நடந்த இந்த விழாவில் அவர் பேசுகையில்,சென்னை போக்குவரத்து போலீசுக்கு பல்வேறு நவீன வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.அவர் கூறியதாவது:-

    சென்னை காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அதில் ஒரு திட்டம்தான் ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல் ஆகும்.அவசர வேளைகளில் சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது,சிக்னலை மாற்றி வழி விடவேண்டும்.போக்குவரத்து போலீசார் அருகில் இல்லாதபோது,சிக்னலை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.இதனால் இதுபோன்ற நேரத்தில் ரிமோட் மூலம் சிக்னலை உடனே மாற்றி விடலாம்.அதனால் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இது தவிர கார்,மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்கள் அதிவேகமாக சென்றால்,அவற்றின் வேகத்தை கணக்கிட்டு அபராத தொகை தொகை விதிக்கும் 6 கருவிகளின் திரைகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து,சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கும் நவீன வசதியும் வரப்போகிறது. கோடைகாலம் தொடங்கி விட்டதால், போக்குவரத்து போலீசாருக்கு இலவசமாக குளிர்ச்சியான மோர் தினமும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர்,இணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
    • மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, உலக சமுதாய சேவா சங்கம், சாமுண்டிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ரவீந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-

    ''ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும், 30 நிமிடமாவது யோகா பயிற்சி செய்ய வேண்டும், யோகாவால் மனமும், உள்ளமும் துாய்மையாகும்; ஞாபகசக்தியை அதிகரிக்கும். பயிற்சி முடித்த மாணவர்கள் யோகா பயிற்சி எடுக்க தவறக்கூடாது என்றார்.

    அதன்பின், பயிற்சி முடித்த, 650 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.

    என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர் சங்கமேஸ்வரன் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் பாரதி நன்றி கூறினார்.

    • ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
    • சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா நேற்று முன்தினம் சென்னை தலைமை இட ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டார். ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    சேலம் மாநகர காவல்துறையில் முதல் கமிஷனரான ஜெகநாதன் தொடங்கி அடுத்தடுத்து ஆண்களே கமிஷனராக நியமிக்கப்பட்டனர். 2006-ல் முதல் பெண் கமிஷனராக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டார்.

    அவருக்கு பின், 13 ஆண்கள் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் சேலம் மாநகர போலீசில், 2-ம் முறையாக, 16 ஆண்டுகளுக்கு பிறகு, ஆவடி போக்குவரத்து, தலைமை இட கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீஸ் கமிஷனர்பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் துறை மானிய கோரிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்போலீசார் குறைகேட்பு கூட்டம்நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாதம் முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமை குறைகேட்பு கூட்டம்நடத்தப்படுகிறது. நேற்று நடந்த கூட்டத்துக்கு போலீஸ் கமிஷனர்பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். அதன்படிமொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டது. இருவாரங்களுக்குள்உரியநடவடிக்கை எடுப்பதாக,மனுதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.

    ×